உதகை மலர் கண்காட்சியை 86 ஆயிரத்து 512 பேர் கண்டு களித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 15-ம் தேதி 127-வது மலர் கண்காட்சி தொடங்கியது. பல்வேறு வகை மலர்களைகொண்டு பட்டத்து யானை, அன்னப்பறவை போன்ற பல உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர். 5 நாட்களாக நடைபெற்று வரும் மலர் கண்காட்சியை இதுவரை 86 ஆயிரத்து 512 பேர் பார்வையிட்டுள்ளதாக, தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.