கோவை மருதமலை அருகே பெண் யானை உடல் நலம் பாதிக்க காரணமான குப்பைக் கிடங்கை தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மருதமலை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது யானையின் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டறியப்பட்டது. இது குறித்து தமிழ் ஜனத்தில் செய்தி வெளியான நிலையில் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து பேட்டியளித்த மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், சோமையம்பாளையம் குப்பை கிடங்கை வெள்ளலூருக்கு இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். மேலும் யானையை நீரில் இறக்கி ஹைட்ரோதெரபி சிகிச்சை அளிக்க இருப்பதாகவும் கூறினார்.