லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ – ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணி, 18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களம் கண்ட லக்னோ அணி இந்த தோல்வியின் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.