நடிகர் விஷாலை ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நடிகை சாய் தன்ஷிகா அறிவித்துள்ளார்.
சாய் தன்ஷிகா நடித்த “யோகி டா” படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, நடிகர் ராதா ரவி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை சாய் தன்ஷிகா, விஷாலுடன் நீண்ட காலமாகவே நல்ல நட்புடன் இருந்ததாகவும், அண்மையில்தான் திருமண முடிவை இருவரும் எடுத்ததாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், ஆக்ஷன் படமான “யோகி டா”வில் சாய் தன்ஷிகா, விஜயசாந்திக்கு இணையாக நடித்திருப்பதாக பாராட்டினார். திருமணத்திற்கு பிறகும் சாய் தன்ஷிகா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்றும் விஷால் குறிப்பிட்டார்.