ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டு மற்றும் ஒகேனக்கல் வன பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக நேற்று மாலை வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.