மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சுற்றித்திரியும் கரடிகளால் கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் நெசவாளர் காலனி, அக்னி சாஸ்தா கோயில், மணிமுத்தாறு தங்கம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த கரடி, அங்கு சுவாமிக்கு வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்களை உண்பதை வாடிக்கையாக வைத்திருந்தது.
இதனால், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். இதனிடையே, கடந்த 30ஆம் தேதி அக்னி சாஸ்தா கோயில் பகுதியில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கூண்டில் ஒரு கரடி சிக்கியது. இந்நிலையில், மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு கூண்டில் மேலும் ஒரு கரடி சிக்கியுள்ளது.