டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சேலம் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பேசு பொருளாகியுள்ளது.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை இழந்துள்ள நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
டாஸ்மாக் விவகாரத்தில் நாள்தோறும் அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சேலத்தில் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சேலம் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “யார் அந்த தம்பி? டாஸ்மாக் காசு எந்த தம்பிக்கு போச்சு?” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
சேலம் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், ஜங்ஷன், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சர்ச்சைக்குரிய போஸ்டரை ஒட்டியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.