கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த வயதான மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வடக்கிபாளையத்தை சேர்ந்த ஹரிஷ் – கோமதி தம்பதி பொள்ளாச்சி சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஹரிஷின் தாய் சாந்தாமணியிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.
சாந்தாமணி ஒரு தண்ணீர் கொடுத்த நிலையில், மீண்டும் மர்மநபர்கள் தண்ணீர் கேட்டபோது ஹரிஷின் தந்தை காளிதாஸ் யார் என்று கேட்டுள்ளார். அப்போது, மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர்.
இது குறித்து ஹரிஷ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.