சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மதராஸி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘மதராஸி’ திரைப்படத்தில், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் FIRST LOOK போஸ்டர் மற்றும் டைடில் டீசரை அண்மையில் படக்குழு வெளியிட்டது.
அவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், 15 முதல் 20 நாட்கள் இலங்கையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.