நடிகர் சூர்யா – நடிகை மமிதா பைஜு காம்போவில் உருவாகவுள்ள சூர்யா 46 திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.
தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். தற்காலிகமாக சூர்யா 46 எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
ரொமாண்டிக் கமெர்ஷியலாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு வரும் 30-ம் தேதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.