நடிகர் சிம்புவின் 51-வது படத்தின் படப்பிடிப்பை வரும் செப்டம்பர் மாதம் தொடங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிம்பு-வின் 51-வது திரைப்பட போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது.
டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு பணிகளை வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையின்போது வெளியிடத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.