வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை என்றும், கதையின் நாயகனாக ரசிகர்கள் விரும்பும் பட்சத்தில் அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் கடந்த மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள திரையரங்கில் மாமன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் சூரி கேக் வெட்டினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வெண்ணிலா கபடி குழு’ பரோட்டா சூரியாக இருந்த தான், இப்போது மாமன் சூரியாக மாறியுள்ளதாகவும் கூறினார்.
மேலும் குடும்பம் சார்ந்த திரைப்படங்கள் வந்தாலும், அதற்கான மரியாதையை மக்கள் கொடுப்பார்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்றும் தெரிவித்தார்.