இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
ரோமில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அல்கராஸ், 7-க்கு 6, 6-க்கு 1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
3 மாத தடைக்குப் பின்னர் பங்கேற்ற முதல் தொடரிலேயே இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.!