தமிழகத்தில் பாஜக சார்பில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மூவர்ணக்கொடி யாத்திரை நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் மூவர்ணக் கொடி யாத்திரை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அப்போது மூவர்ணக்கொடி யாத்திரை குறித்து நிர்வாகிகள் எடுத்துரைத்தாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜகவின் மூவர்ணக்கொடி யாத்திரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், தற்போதுவரை தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரைகள் நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆபரேசன் சிந்தூர் நினைத்து பெருமைப் பட வேண்டும் என்றார்.