ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜரான் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி வீரர் கே.எல்.ராகுல், 112 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார்.
இதன் மூலம் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
அதேபோல, தான் விளையாடி அனைத்து அணிகளுக்காகவும் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.