பழனி முருகன் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணத்தைத் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சில தினங்களுக்கு முன்பு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, கோயில் வெளிப்பிரகார பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் கிழிந்த காகிதங்கள் அதிகமாக இருந்தன.
இதனால், உண்டியலில் பணம் ஏதும் திருட்டுப் போகிறதா எனக் கோயில் அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்துக் குறிப்பிட்ட பகுதியில் உள்ள உண்டியல்களை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது, மகேந்திரன் என்பவர் உண்டியலின் துவாரத்தில் காகித அட்டையை வைத்துவிட்டு பணத்தைத் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 5 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.