ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்திய அணி விலகுவதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசியக் கோப்பை தொடர் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து தொடர்கள் மீதுதான் தற்போது தங்களது முழு கவனம் உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.