நாகர்கோவில் அருகே மின்சாரம் தாக்கிய மூதாட்டியைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தெக்குறிச்சி பகுதியில் வசிக்கும் வள்ளியம்மாள் என்ற மூதாட்டி ஈரத்துணியைக் கம்பியில் உலர்த்த முயன்றபோது, மின்சாரம் தாக்கி தரையில் விழுந்துள்ளார்.
அண்டை வீட்டில் வசிக்கும் அமுதன் என்ற இளைஞர் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்து காப்பாற்ற வந்தபோது, அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது.
சுய நினைவு இழந்த அமுதன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்