டாஸ்மாக் நிறுவன பொது மேலாளர், துணை பொது மேலாளர் இருவரும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அதன் மேலாண் இயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதேபோல் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா மற்றும் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இந்நிலையில் மீண்டும் விசாரணை நடத்த இருவரையும் நாளை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.