டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பான அமலாக்கத்துறை அறிக்கையால் திமுக அரசுக்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பான அமலாக்கத்துறை அறிக்கையால் திமுக அரசுக்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது என எச். ராஜா தெரிவித்துள்ளார்.
“ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி குடும்பமே டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டியவர், ஊழலை மடைமாற்றும் விதமாக திமுக அரசு மும்மொழி கொள்கை குறித்துப் பேசியது என எச். ராஜா கூறினார்.
அமலாக்கத்துறையின் விசாரணைக்குப் பின் ஊழலில் யாருக்குத் தொடர்பு உள்ளது எனத் தெரியவரும் என்றும் அதிமுக – பாஜக கூட்டணி திமுகவுக்குத் தோல்வி பயத்தைக் காட்டுகிறது என்று எச். ராஜா குறிப்பிட்டார்.