மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா தொற்று காரணமாகச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுவனும், 54 வயதான நபரும் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உயிரிழப்புக்கு கொரோனா மட்டுமே காரணமல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
14 வயது சிறுவன் சிறுநீரக செயலிழப்புக்கும், 51 வயதான நபர் புற்றுநோய்க்கும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.