வேலூர் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி நீண்ட போராட்டத்திற்குப் பின் அப்புறப்படுத்தப்பட்டதால், அங்கு 12 மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானது.
பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சூளகிரியில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நீண்ட நேரம் போராடி கிரேன் உதவியுடன் பழுதான லாரியை அப்புறப்படுத்தினர். இதையடுத்து அப்பகுதியில் சுமார் 12 மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டன.