தங்க நகைக்கடன்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒன்பது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, அடகு வைக்கும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவிகித தொகை மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்றும், அடகு வைப்பவர்கள், அந்த நகைக்கு தாங்கள்தான் உரிமையாளர் என்ற ஆவணத்தைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும் என்றும், கட்டாயம் 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.