நீதிபதியாக பணியாற்ற, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் ஏ.ஜி. மாசிஹ் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, சிவில் நீதிபதிகள் தேர்வு எழுதும் எந்தவொரு விண்ணப்பதாரரும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் விதிகளைத் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.