தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கச் செல்வதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாத முதலமைச்சர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அன்று 2G-காக அப்பா டெல்லி சென்ற நிலையில், இன்று டாஸ்மாக்கிற்காக ஸ்டாலின் டெல்லி செல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? என்றும் இபிஎஸ் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.