டெல்லியில் தனியார் பள்ளியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரீத் விஹார் காவல் நிலையத்திற்குட்பட்ட நிர்மன் விஹார் காலனியில் தனியார் பள்ளியொன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 5 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.