நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. சிங்கப்பூரில் மட்டும் மே மாத தொடக்கத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு தலைத் தூக்க தொடங்கியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தற்போது 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.