மகாராஷ்டிர மாநிலம் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கல்யாண் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சப்தஷ்ரிங்கி கட்டடத்தின் நான்காவது மாடியில், தரைத்தள வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் 11 பேர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக மீட்புப் பணியில் களமிறங்கிய மீட்புக் குழுவினர், 5 பேரை பத்திரமாக மீட்டனர். 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பழமையான இந்த கட்டடத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. பாதுகாப்பு கருதி கட்டடம் இடிக்கப்படும் என்றும், குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.