டாடா ஹாரியர் இவி கார் அடுத்த மாதம் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கும் முன்னதாக வந்த இவி கார்களைப் போலவே ஒமேகா பிளாட்ஃபார்ம்களைக் கொண்டு, அதன் தளம் மற்றும் பேட்டரி தளங்களில் சிறிது மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு ஜெனரேசன் 2 ஆக்டி. ஆர்க்கிடெக்சர் என டாடா நிறுவனம் பெயரிட்டுள்ளது. இது டாடாவில் மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TATA Curvv-வை விட பெரியளவிலான பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இதன் விலை 24 லட்சம் முதல் 28 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.