5 கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் Roxx காரின் தேவை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா தார் காரானது நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். இந்த கார் இந்தியாவில் மூன்று-கதவு மற்றும் ஐந்து-கதவு விருப்பங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 2025இல் முதல் முறையாக, இந்த பிரபலமான SUVஇன் மாதாந்திர விற்பனை பத்தாயிரம் யூனிட்டுகளை தாண்டியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 703 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.