திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், லாரியை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்நெல்லி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, 2 மாதங்களாகியும் பணப் பட்டுவாடா செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதிகாரிகளும் முறையாகப் பதில் தெரிவிக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.