நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற சோனியா மற்றும் ராகுல் காந்தியின் கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக நேஷனல் ஹெரால்ட் முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு தொடர்பான புகார் விவரங்களை தமது தரப்புக்கு வழங்க வேண்டும் என மனுதாரர் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விஷால் கோக்னே, புகார் விவரங்களைச் சுப்பிரமணிய சுவாமிக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனச் சோனியா மற்றும் ராகுல் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.