தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிறுவன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 96 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாதவ்சங்கர் – அருணா தம்பதி, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டிபட்டிக்குக் குடிபெயர்ந்தனர். அவர்களது மகன் பிரணவ் அருகேயுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார்.
ஆரம்பத்தில் தமிழில் பேசவே தடுமாறிய பிரணவ், நாளடைவில் தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பிரணவ் தமிழில் 96 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார். மேலும், 490 மதிப்பெண்கள் எடுத்து ஆண்டிபட்டி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.