டூரிஸ்ட் ஃபேமிலி படம் உலகளவில் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் கடந்த 1-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 3 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
படத்தைப் பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவைப் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்துள்ளது. உலகளவில் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.