சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்குவாரி விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய பொக்லைன் ஆப்ரேட்டரின் உடல் நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.
மல்லாக்கோட்டையில் மேகவர்ணம் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், சாய்வுப் பாதை வழியாக பொக்லைன் இயந்திரம் இறங்கியதில் திடீரென கற்கள் சரிந்தன.
இதனால் முருகானந்தம், ஆண்டிச்சாமி, ஆறுமுகம், கணேசன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய பொக்லைன் ஆப்ரேட்டரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஜித் என்பவரின் உடல் நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், குவாரி உரிமையாளர் மேகவர்மன் மீது எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.