யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பூஜா கேத்கருக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான பூஜா கேத்கர், புனேயில் பயிற்சி பெற்று வரும்போதே அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாகப் புகார் எழுந்தது.
ஐஏஎஸ் தேர்வுக்கு முறைகேடாக ஓபிசி சான்றிதழ் பெற்றதாக அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறப்பட்டன. விசாரணை முடிவில் யுபிஎஸ்சி பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்வு முடிவை ரத்து செய்தது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு பூஜா கேத்கர் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.