கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கும் நம்ம மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்கள் ரகசியமாகப் படம்பிடிக்கப்படுவதாக பாஜக எம்.பி மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது தனியுரிமை மற்றும் கண்ணியத்தை அப்பட்டமாக மீறும் செயல் எனவும், இவை கடுமையான குற்றம் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரு நகர காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.