சபரிமலையில் கடந்த 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
வைகாசி மாதப்பிறப்பை முன்னிட்டு மாதாந்திர பூஜைக்காகக் கடந்த 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயல் நடை திறக்கப்பட்டது.
மே 14 முதல் 19ஆம் தேதி வரை சபரிமலையில் ஒரு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு வரும் 4ஆம் தேதி மாலை 5 மணிக்குச் சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் எனவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
ஆனி மாத பூஜைக்காக ஜூன் 14ஆம் தேதி ஐய்யப்பன் கோயில் நடை திறக்கப்படும் என்றும், ஜூன் 19ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் மூலமாகப் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.