கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
விஜயபுரா மாவட்டம் மனகுலி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விஜயபுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பைக் கடந்து, எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது.
இதனால் அந்த பேருந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.