இந்திய முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இவரிடம் போட்டி இல்லாத காலத்தில் சிறுநீர் மாதிரியைச் சேகரித்து ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஷிவ்பால் சிங் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்குவது இது 2-வது முறையாகும். தற்போது உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அவர் மீது தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருகிறது.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில் 8 ஆண்டுகள் வரை போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.