தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அரசுப் பேருந்தும் டெம்போ ட்ராவலர் வேனும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடகாவில் இருந்து டெம்போ டிராவலர் வேன் ஒன்று தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது. செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் வந்த போது, திருச்சியை நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 20 பேர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்த 5 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.