திரைப்படங்கள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென நடிகர் சூரி கேட்டுக்கொண்டுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திரைப்படத்துறையும், அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் இணையத்தில் படங்கள் வெளியாவதை முழுவதுமாக தடுக்க முடியவில்லை என தெரிவித்தார்.
திரைப்படங்கள் சட்டவிரோதமாக வெளியாவதை தடுக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அந்த படங்களுக்கு வரவேற்பு அளிக்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார். விஷாலின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.