சிந்துநதி நீரை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை சீனா துரிதப்படுத்தி வருகிறது.
1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முகமது அணை கட்டுமானப் பணிகளை 2025-ல் திட்டமிட்டபடி நிறைவேற்றி முடிக்க சீனா தயாராகி வருகிறது.
இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் பாகிஸ்தானுக்கு நீர் கொடுத்து உதவவும் சீனா முன்வந்திருப்பதாகவும், அதற்காகவே முகமது அணையின் கட்டுமானம் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.