பாகிஸ்தானில் பள்ளி பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டத்தில் உள்ள ராணுவ பள்ளியின் பேருந்து ஒன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து மலைப்பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 3 பள்ளிக்குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 38 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.