காஞ்சிபுரம் அருகே வாத்து மேய்க்க வந்தபோது மஞ்சள் காமாலையால் இறந்த சிறுவனைப் பெற்றோருக்கு தெரியாமல் புதைத்த குத்தகை ஒப்பந்ததார் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனைப் பெற்றோரின் அனுமதியுடன் வாத்து மேய்க்கக் குத்தகை ஒப்பந்ததாரர்கள் அழைத்து வந்துள்ளனர்.
அந்த சிறுவன் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார். இது குறித்து சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்காமல், சடலத்தைக் காஞ்சிபுரம் செவிலி மேடு பகுதியில் புதைத்துள்ளார்.
இதனிடையே, சிறுவன் குறித்துக் கேட்டபோது மழுப்பலான பதிலைக் கூறியதால், பொற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சடலத்தைத் தோண்டி எடுத்தனர். மேலும், ஒப்பந்ததாரர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.