ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகச் சமீபத்தில் திடீரென அறிவித்தார்.
தோனி பாணியில் அவர் ஓய்வு பெறும் திட்டத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது தோனி பாதியிலேயே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதே மாதிரி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற ரோகித் சர்மா முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதனை நிராகரித்த பிசிசிஐ, இங்கிலாந்து தொடரில் அவரை கேப்டனாக இல்லாமல் வீரராகவே தேர்வு செய்ய முடிவு செய்ததாகச் சொல்லப்படுகிறது.
அதன் காரணமாகவே ரோகித் சர்மா திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.