நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிசிஐடி விசாரணை மந்தமாக உள்ளது எனவும் அதே சமயம் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை எனவும் கூறினார்.