நடிகை ரன்யா ராவிற்குக் கர்நாடக உள்துறை அமைச்சரின் அறக்கட்டளையிலிருந்து 40 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் பண முறைகேடும் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 16 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய கல்வி அறக்கட்டளையிலிருந்து ரன்யா ராவின் வங்கிக் கணக்கிற்கு 40 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.