திருச்சி அருகே மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மூன்று மணி நேரத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் உரிய விசாரணை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிறுகனூர் அருகே சக்சீடு எனும் ஒருங்கிணைந்த மது போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கே அகிலாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரைச் சேர்த்த நிலையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.