கடந்த 2021-ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ‘ஜென்.இ.மேன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் விமல் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் இந்த படத்தினை மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் இயக்கினார். இதில் பசில் ஜோசப், லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ‘ஜென்.இ.மேன்’ படத்தைத் தமிழ் மொழியில் சிதம்பரத்தின் உதவி இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.